www.garudabazaar.com

"படம் பாத்தேன்னு சொன்னீங்க".. 'கலகத்தலைவன்' குறித்து அமைச்சரிடம் விசாரித்த முதல்வர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

MK Stalin asked Minister Ma Subramanian about Kalaga Thalaivan

Also Read | பூர்வீக வீட்டில் கீர்த்தி சுரேஷ்.. தென் தமிழ் நாட்டுல இந்த கிராமம் தான் சொந்த ஊராம்! வைரல் PHOTOS

அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், விக்ரம், சர்தார், லவ் டுடே உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

நடிகராக உதயநிதி ஸ்டாலின் கடைசியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார்.

அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”.

MK Stalin asked Minister Ma Subramanian about Kalaga Thalaivan

இப்படம் உலகமெங்கும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் போக, நடிகர் பிக்பாஸ் ஆரவ் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைத்துள்ளார்கள்.

சில நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து,  தனியார் திரையரங்கில்  பார்த்தார். படத்தை பார்த்த பின், சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  கலகத் தலைவன் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்டார். இந்த நடைபயிற்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஸ்டாலினுடன் சேர்ந்து நடைபயிற்சி சென்றார்.

MK Stalin asked Minister Ma Subramanian about Kalaga Thalaivan

நடைபயிற்சியின் போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள கலகத்தலைவன் படம் குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியனிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். "படம் பாத்தேன்னு சொன்னீங்க" என முதல்வர் ஸ்டாலின் கேட்க, இதற்கு பதில் அளித்த மா. சுப்ரமணியன், "முதல் நாள் பாத்தேன்" என கூறுகிறார். உடனே முதல்வர் ஸ்டாலின், "ரிப்போர்ட் நல்லாருக்கு" என கூறுகிறார்.

மேலும் பேசும் அமைச்சர் மா. சுப்ரமணியன், "படம் ரொம்ப நல்லா இருக்கு. பொதுவாக ஒரு தியேட்டரில் பாடல் வரும் போது மக்கள் எழுந்து போவார்கள். இந்த படத்தில் அப்படி ஒருத்தர் கூட செய்யவில்லை" என மா. சுப்ரமணியன் கூறுகிறார்.  இதற்கு "படத்தை நல்லா எடுத்துருக்காங்க" என முதல்வர் ஸ்டாலின் கூறுவதும் வீடியோ காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.

Also Read | சந்திரமுகி-2 படத்தில் இணையும் பிரபல முன்னணி நடிகை? தரமான அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

MK Stalin asked Minister Ma Subramanian about Kalaga Thalaivan

People looking for online information on Kalaga Thalaivan, Ma Subramanian, MK Stalin, Udhayanidhi Stalin will find this news story useful.