www.garudabazaar.com

'காதல் ரோஜாவே' .. கீ-போர்டில் வாசித்த சுட்டிக் குழந்தை.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சோஷியல் மீடியாவில் நாம் அதிக நேரம் உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

AR Rahman share little girl playing keyboard video

Also Read | கூலாக என்ட்ரி.. 'ரஞ்சிதமே' ஸ்டைலில் விஜய் கொடுத்த Flying Kiss தான் இப்போ ட்ரெண்டிங்!!

இதில் அதிர்ச்சிகரமான, வினோதமான, மெய்சிலிர்க்க கூடிய வகையில் என விதவிதமான விஷயங்களை பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.

அதே போல, ஒரு நபரின் நம்ப முடியாத வகையிலான திறமை குறித்த விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறும். நடிப்பு, பாடல், விளையாட்டு என தங்கள் தேர்ந்த துறையில் இருக்கும் விஷயங்களை வீடியோவாக இணையத்தில் பதிவிடும் போது அவர்களின் திறனுக்கான அங்கீகாரம் கூட சரியாக கிடைக்கலாம்.

அந்த வகையில், தற்போது பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருவதுடன் அவர்களை மதி மறக்கவும் வைத்து வருகிறது. இதற்கு காரணம், அந்த வீடியோவில் சிறுமி ஒருவர், ரோஜா படத்தில் வரும் பாடலின் இசையை கீபோர்டில் வாசிப்பது தான்.

கடந்த 30 ஆண்டுகளாக இசை உலகில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் ஏ.ஆர். ரஹ்மான், ஆஸ்கர் விருது, தேசிய விருது உள்ளிட்ட எக்கச்சக்க விருதுகளை வென்று குவித்துள்ளார். தொடர்ந்து, தனது இசையால் பலரது பிளேலிஸ்ட்டையும் ஆக்கிரமித்து வரும் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தின் மூலம் தான் இசை அமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.

AR Rahman share little girl playing keyboard video

அந்த படத்தில் வரும் "காதல் ரோஜாவே" என்ற பாடலை சிறுமி ஒருவர் கீபோர்டில் இசைத்துள்ளார். பார்ப்பதற்கு சுமார் 3 வயது இருக்கும் இந்த சிறுமி, மனதை உருக்கும் வகையில் அந்த பாடலை இசைக்கிறார். இந்த வீடியோவையும் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்றைய தலைமுறை குழந்தைகள் இந்த அளவுக்கு திறமையுடன் விளங்கி வரும் நிலையில், சிறுமியை பாராட்டுவதுடன் மட்டுமில்லாமல் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் ஏரளாமானோர் வாழ்த்தி வருகின்றனர்.

Also Read | சசிகுமார் நடிப்பில் 'காரி'.. ரிலீஸ் நாளில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தரப்போகும் சர்ப்ரைஸ்

'காதல் ரோஜாவே' .. கீ-போர்டில் வாசித்த சுட்டிக் குழந்தை.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த வீடியோ.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman share little girl playing keyboard video

People looking for online information on AR Rahman, Kadhal Rojave Song, Little girl playing keyboard will find this news story useful.