www.garudabazaar.com

Kalaga Thalaivan : உதயநிதி நடித்த ‘கலகத் தலைவன்’.. படம் பார்த்துவிட்டு பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

CM MK Stalin watched udhayanithi Starring Kalaga Thalaivan movie

Also Read | “ரச்சிதா ஏன் சிறு நீர்னு கேக்குறாங்க”.. அரண்மனை டாஸ்கால் குழம்பிய நடன மாஸ்டர்.. bigg boss 6 tamil

நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், விக்ரம், சர்தார், லவ் டுடே உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

நடிகராக உதயநிதி ஸ்டாலின் கடைசியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள “கலகத் தலைவன்” திரைப்படம் உலகமெங்கும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.  இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் போக, நடிகர் பிக்பாஸ் ஆரவ் வில்லனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைத்துள்ளார்கள்.

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீஸர், சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லரும் வெளியானது. மிகவும் த்ரில்லர் வகைமையில் இருந்த இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து,  தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின், சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  கலகத் தலைவன் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Also Read | விபத்தில் நொறுங்கிய கார்.. ‘வேற லெவல்’ பிஎம்டபுள்யூ காரை வாங்கிய KGF நடிகர்.! வைரல் ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

CM MK Stalin watched udhayanithi Starring Kalaga Thalaivan movie

People looking for online information on Kalaga Thalaivan, Magizh Thirumeni, MK Stalin, Udhayanithi Stalin will find this news story useful.