Yaanai

ரசிகர்களின் அன்பு வென்றது.! விலகுவதாக அறிவிச்ச சீரியல் ஹீரோவின் நெகிழ்ச்சி முடிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்களை வெகுவாக கவர்ந்த பல நிகழ்ச்சிகளிலும் வெகுமக்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக சீரியல்கள் திகழ்கின்றன.

Roja Seial Hero changed decision of quitting fans love

Also Read | 'விக்ரம்' படத்தின் OTT ரிலீஸ்.. ப்ரோமோ வீடியோவை இயக்குனது இந்த பிரபலமா? முழு தகவல்

சீரியல்கள்:

முந்தைய காலங்களைப் போன்று அல்லாமல் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது, தற்போது பல தரப்பினரும் சீரியல் பார்க்கும் பார்வையாளர்களாக இருக்கின்றனர். குறிப்பிட்ட தரப்பினர்தான் சீரியல்கள் பார்க்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு சீரியல்களும் பலரிடையே ரீச் ஆகின்றன.

ரோஜா சீரியல்:

அந்த வகையில் சன் டி.வியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் முக்கியமான சீரியல் ரோஜா சீரியல். எப்போதும் விறுவிறுப்பான காட்சிகளுடன் ரோஜா சீரியல் அமைக்கப்பட்டு இருக்கும். இதில் ஹீரோ வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். இதனாலையே இன்வெஸ்டிகேஷன், கேஸ், கோர்ட், ஜெயில் என எப்போதும் இந்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்.

Roja Seial Hero changed decision of quitting fans love

நாயகன் அர்ஜூன் (சிபு சூர்யன்):

இதில் நாயகனாக நடித்து வருபவர் தான் சிபு சூரியன். அர்ஜுன் என்கிற கதாபாத்திரமாக இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம், இந்த சீரியலில் வலுவான கதாபாத்திரமாக இருக்கும். அதற்கு அந்த கதாபாத்திரம் பாதி காரணமென்றால், பாதி காரணம் சிபு சூரியனின் ஆளுமையான நடிப்புதான் என்று ரசிகர்கள் குறிப்பிடுவது உண்டு.

விலகல் முடிவும் & மறுபரிசீலனையும்:

ஆனால் அண்மையில் இந்த சீரியலை விட்டு விலகுவதாகவும், ஆகஸ்டு வரை மட்டுமே இந்த சீரியலில் நடிக்கவிருப்பதாகவும் அறிவித்து, அத்துடன் ரசிகர்களால் இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாததற்கு வருத்தமும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த முடிவை ரசிகர்களின் தொடர்ச்சியான மெசேஜ், இணையதளத்தில் வந்த கோரிக்கை உள்ளிட்டவற்றால், சிபு சூர்யன் இந்த முடிவை மறுபரிசீலனை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Roja Seial Hero changed decision of quitting fans love

ரசிகர்கள் அன்பு:

இது தொடர்பான தம்முடைய பதிவில், மீண்டும் அர்ஜுன் கதாபாத்திரமாக ரோஜா சீரியலில் தன்னை பார்க்கலாம் என்று சிபு சூர்யன் தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் அன்பால் மனம் மாறி ஒரு தமிழ் சீரியல் ஹீரோ, இப்படி அரிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களிடையே பெரு மகிழ்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

Also Read | இங்கிலாந்து சாலையில் ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Roja Seial Hero changed decision of quitting fans love

People looking for online information on Roja Seial, Sibbu Suryan, Sun TV, Tv Serial will find this news story useful.