"ஆஹா.. இது செம technique -ஆ இருக்கே.?" - ஆனா வொர்க் அவுட் ஆகாம போச்சுனா.. உஷாராவும் இருக்கணும்.!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுள் முக்கியமான நிகழ்ச்சிகளாக சீரியல்கள் திகழ்கின்றன.
![eeramaana rojave 2 technique to stop hiccups viral eeramaana rojave 2 technique to stop hiccups viral](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/eeramaana-rojave-2-technique-to-stop-hiccups-viral-photos-pictures-stills.jpeg)
மக்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று தனி வரவேற்பும் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்ப்பதற்கான விஷயங்கள் அடங்கிய விஜய் டிவி சீரியல்களில் இளைஞர்களுக்கு பிடித்தமான சீரியல்களும் இருக்கின்றன.
அவற்றில் முதன்மையான சீரியலாக ஈரமான ரோஜாவே சீரியல் திகழ்கிறது. இதுவரை ஈரமான ரோஜாவே சீரியல் முதல் சீசன் பல்வேறு பார்வையாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பும் உண்டு பண்ணியது. இதனை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிறது.
இதில் அண்ணன் - தம்பி இருவரும் அக்கா தங்கைகளை திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதில் காவியா விரும்பியது தன் கணவரின் தம்பியைதான். எனினும் விரும்பிய வாழ்க்கையை விட அமைந்த வாழ்க்கையை எப்படி ஏற்று வாழ்கிறார்கள் என்பதே கதை. ஆம், தான் விரும்பியவருடைய அண்ணனைதான் காவ்யா திருமணம் கொண்டார்.
அவருடைய காதலரோ, தன் அண்ணன் திருமணம் செய்ய வேண்டிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இப்படி இரண்டு ஜோடிகளும் மனம் மாறி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், காவியா சாப்பிடும் போது புரையேறி விக்கல் வர, தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கவில்லை.
அப்போது அவளுடைய கணவர் தண்ணீரை வேக வேகமாக எடுத்து காவியாவுக்கு கொடுக்காமல் தான் அருந்துகிறார். இந்த ஆச்சரியத்தை பார்த்த காவியா தனக்கு தண்ணீர் கொடுக்காமல் தான் அருந்துகிறாரே என்று பார்க்க, காவ்யாவுக்கு விக்கல் நின்று விடுகிறது. அப்போது உடனே அவருடைய கணவர் விக்கல் நின்றிடுச்சா... இப்படி செய்தேன் என்கிறார். இதை பார்ப்பவர்களும் இது புது டெக்னிக்காக இருக்கிறது, சுவாரஸ்யமாகவும் இருக்கிறது என பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் எனினும் இதுபோன்ற அவசரத்தில் இருப்பவர்களுக்கு உதவுங்கள்.. பரிசோதனை முயற்சி வேண்டாம், ஒரு வேளை கைகொடுக்காமல் போய்விட்டால் சிக்கலாகிவிடும் என்றும் கூறி வருகின்றனர். பலரும் இந்த ப்ரோமோவை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read | தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. செல்வராகவன் வெளியிட்ட புதிய அப்டேட்! வைரல் PHOTO