எவர்க்ரீன் 80's ரீயூனியன் - வைரலாகும் ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1980-களில் சினிமாவில் கோலொச்சிய முன்னணி நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் சங்கமிக்கும் நிகழ்வாக திகழும் 80’s ரீயூனியன் நிகழ்ச்சி இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.

Megastar Chiranjeevi hosted yearly event 80's reunion at Hyderabad

நேற்று (நவ.24)ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற  80’s ரீயூனியன் நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி திரையுலகினை சேர்ந்த நடிகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் அனைத்து நடிகர்கலும், கறுப்பு மற்றும் தங்க நிற உடை அணிந்திருந்தனர்.

இதில் வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, ரமேஷ் அரவிந்த், ரேவதி, ஜெயசுதா, ராதிகா, லிஸ்ஸி, பிரியதர்ஷன், சுமலதா, சுஹாசினி, அம்பிகா, ராதா, பிரபு, மோகன்லால், பாக்யராஜ், பூர்ணிமா, அமலா, சரிதா, சரத்குமார், ஷோபனா, நதியா, ஜாக்கி ஷ்ராஃப், குஷ்பு, ரகுமான், மேனகா, ஜெயபிரதா, சுரேஷ், ஜெயராம், சுமன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நட்சத்திர சங்கமத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒருவரிடம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் 80’s ரீயூனியன் நிகழ்ச்சியை தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார்.

நடிகர்கள் அனைவரும் உற்சாகமாக பல இண்டோர் கேம்ஸ்களில் பங்கேற்றனர். இந்த 80’s ரீயூனியன் விழாவில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக நடிகர் ராம் சரண் கலந்துக் கொண்டார். 80’s நடிகர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி மற்றும் க்ரூப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.