Flash News : சூப்பர் ஸ்டாருடன் பொங்கல் ரேஸில் இணைந்த பிரபல நடிகரின் போலீஸ் படம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 21, 2019 04:03 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படத்தை தொடர்ந்து பொங்கல் ரேஸில் பிரபல நடிகரின் போலீஸ் திரைப்படமும் இணைந்துள்ளது.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆதித்ய அருணாசலம் என்ற மிரட்டலான போலீஸ் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இத்துடன் மற்றொரு பிரபல நடிகரின் போலீஸ் திரைப்படமும் ரிலீசாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘இந்திய மைக்கேல் ஜாக்சன்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகரான பிரபுதேவா முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பொன் மாணிக்கவேல்’.
ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். நேமிச்சந்த் ஜபாக் தயாரித்துள்ள இப்படமும் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
FLASH NEWS!🥁🥁🥁#PonManickavel is all set for a grand worldwide theatrical release on #Pongal2020. @PDdancing @immancomposer @acmugil @proyuvraaj @SonyMusicSouth #PonManickavelPongal2020 pic.twitter.com/25dtUD2EZT
— Nemichand Jhabak (@JabaksMovies) November 21, 2019