டிக்டாக் நண்பர்களே-'இந்த மாதிரி வீடியோ பண்ணுங்க' மாஸ்டர் பிரபலம் வீட்டிலிருந்து ஒரு அட்வைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக்டாக்கில் வீடியோ போடுபவருக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு யோசனை கூறியுள்ளார்.

master actor shanthnu bakyaraj replies to a tiktok user

தமிழ் சினிமாவில் முத்த இயக்குநரும் நடிகருமாக வலம் வருபவர் கே.பாக்யராஜ். முந்தானை முடிச்சு, தாவனி கனவுகள் உள்ளிட்ட இவரது படங்கள் சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவே பல நாட்கள் ஓடி வெற்றி பெற்றன. சமீப காலங்களில் இயக்கத்திற்கு சற்று ஓய்வு கொடுத்துள்ள பாக்யராஜ், படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது மகன் ஷாந்தனு தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகிறார்.

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், டிக்டாக் செய்பவர் ஒருவரின் வீடியோவுக்கு ரிப்ளை செய்துள்ளார். பாக்யராஜ் போல நடித்து காட்டும் அந்த வாலிபரின் டிக்டாக் வீடியோவை பார்த்து, பாக்யராஜ் தெரிவித்த கருத்தை, ஷாந்தனு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'மிகவும் அருமையாக நடித்துள்ளீர்கள். ஆனால் ஒரு சின்ன அட்வைஸ், இத்துடன் சேர்த்து உங்கள் சொந்த வசனங்களையும் பேசி முயற்சி செய்யுங்கள், அதுவே முழுநேர நடிப்புக்கு உதவும், படத்தின் வாய்ஸுக்கு வெறும் வாயை மட்டும் அசைத்து நடித்து பழகினால், நிஜத்தில் நடிக்கும் போது தடையாக இருக்கும், நீங்கள் நடித்ததை மிகவும் ரசித்தேன், நன்றி' என அவர் தெரிவித்துள்ளார். பாக்யராஜிடம் இருந்து வந்த அறிவுரையால் டிக்டாக் செய்த வாலிபர் உற்சாகத்தில் உள்ளார்.

Entertainment sub editor