#Official : வெறித்தனம்...வெறித்தனம் - மாஸ்டர் படத்தின் குட்டிகதை... இந்த பாடலை பாடியவர் உங்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடலை பாடியவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ஷாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் பாடலான குட்டிகதை வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குட்டிகதை பாடலை நடிகர் விஜய் பாடியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இதை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடைசியாக கத்தி படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
We’re back baby!
Thalapathy @actorvijay sir, the Masster himself lends his voice to tell you guys a kutti kathai! 😎#Master #MasterSingle #OruKuttiKathai
Feb 14tb 5 pm :) @Dir_Lokesh @Jagadishbliss @MalavikaM_ @Lalit_SevenScr pic.twitter.com/6QB3wT6NPh
— Anirudh Ravichander (@anirudhofficial) February 12, 2020