"உங்களுக்கு 2 நிமிஷம் டைம் தரேன்.." - மாஸ்டர் படத்தின் 'மரண மாஸ்' விஜய் சேதுபதி பாடல் வெளியானது...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஆடியோ லான்ச் முதல் முறையாக சற்று வித்தியாசமாக படக்குழு மற்றும் வெகு சில ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Master Film Vijay Sethupathi Polakatum para para song released மாஸ்டர் படத்தின் 'மரண மாஸ்' விஜய் சேதுபதி பாடல் வெளியானது

இதனையடுத்து மாஸ்டர் படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார். அனைத்து பாடல்களையுமே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை சிங்கிள் ஆக வெளிவந்த குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு பாடல்களுமே மிகப் பெரிய ஹிட் அடித்தது. அந்த வகையில் அடுத்த சிங்கிளாக வில்லன் விஜய் சேதுபதிக்கு ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

இதில் விஜய் சேதுபதி 'காதலும் கடந்து போகும்' பட ஸ்டைலில் இருக்கிறார். பாடலைப் பார்த்தாலே படத்தில் அவருக்கு எவ்வகையான மாஸ் ரோல் இருக்கும் என்று ஒரு யூகம் பிறக்கிறது. இந்தப் பாடலின் மூலம் விஜய் சேதுபதி ரசிகர்களும் சந்தோஷத்தில் உள்ளனர். பாடலின் ஆரம்பத்திலேயே வரும் 'பன்ச்' டயலாக் வேற லெவல். இந்த பாடலின் மூலம் மாஸ்டர் படத்தின் மேலிருக்கும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது.

Entertainment sub editor