''ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமல்ல..'' - விஜய்யின் மாஸ்டர் பிரபலம் சொல்லும் வரலாற்று நினைவு.
முகப்பு > சினிமா செய்திகள்ராப் பாடகர் அறிவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 1 குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ராப் இசை பாடகராக பிரபலமானவர் அறிவு. தனி இசைப்பாடகரான இவரின் ஸ்னோலின் பேசுறேன், கள்ளமௌனி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் சினிமா பாடல்களும் பாட தொடங்கினார். பட்டாஸ், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் இவர் பாடியுள்ளார். மேலும் அண்மையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இவர் எழுதி பாடிய வாத்தி ரெய்டு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 1 குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''ஏப்ரல் 1, முட்டாள்கள் தினமல்ல. அறிவாசான் அம்பேத்கர் அவர்களின் 'ரூபாயின் பிரச்சனை' (Problem of Rupee) ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி - Reserve Bank துவங்கப்பட்ட தினம். சட்டம் தந்த மாமேதை, இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆற்றிய பெரும்பங்கை மறவாதிருப்போம். ஜெய்பீம்'' என பதிவிட்டுள்ளார்.
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினமல்ல. அறிவாசான் அம்பேத்கர் அவர்களின் 'ரூபாயின் பிரச்சனை' (Problem of Rupee) ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி - Reserve Bank துவங்கப்பட்ட தினம். சட்டம் தந்த மாமேதை, இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆற்றிய பெரும்பங்கை மறவாதிருப்போம். ஜெய்பீம்💙🙏✍️ pic.twitter.com/srT7pc3lPT
— Arivu (@TherukuralArivu) April 1, 2020