கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டது. ஆங்காங்கே வெளியில் வரும் மக்களுக்கு போலீஸ் கடுமையான தண்டனைகள் விதித்து வருகிறது.
இதனையடுத்து கடந்த வெள்ளியன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸிற்கு எதிராக நமது ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நேற்று ( ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை அணைத்து விட்டு , விளக்கு, டார்ச் லைட் உள்ளிட்டவற்றின் மூலம் ஒளி எழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் 'மேயாதமான்', 'ஆடை' படங்களின் இயக்குநரும் 'மாஸ்டர்' பட வசன கர்த்தாக்களில் ஒருவருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ரெண்டு நாள் முன்பு தான் காற்று மாசு குறைந்து பூமி மீண்டும் சுவாசிக்கிறது, விலங்குங்கள் மீண்டும் வலம் வருகிறது, குருவி சத்தம் கேட்கிறது, கடலோரத்தில் டால்பின்கள் காண முடிகிறது என செய்தி படித்தேன். இன்று அதற்கெல்லாம் சேர்த்து வேட்டு வைத்தனர் மக்கள். நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
ரெண்டு நாள் முன்பு தான் காற்று மாசு குறைந்து பூமி மீண்டும் ஸ்வாசிக்கிறது, விலங்குங்கள் மீண்டும் வலம் வருகிறது, குருவி சத்தம் கேட்கிறது, கடலோரத்தில் டால்பின்கள் காண முடிகிறது என செய்தி படித்தேன். இன்று அதற்கெல்லாம் சேர்த்து வேட்டு வைத்தனர் மக்கள். நன்றி🙏#9MinutesForIndia #Diwali
— Rathna kumar (@MrRathna) April 5, 2020