"உஷார்...கொரோனா புது அவதாரம் எடுக்கிறது.." - உறுதியான தகவலை பகிர்ந்து, எச்சரித்த பிரபல நடிகை...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நோயினால் மிருகங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நியூயார்க் பகுதியில் இருக்கும் வனவிலங்கு காப்பகத்தில் இருக்கும் 4 வயது புலிக்கு கொரோனா நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்ப்பவர்களிடம் இருந்து அந்நோய் பரவி இருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது.
இந்த செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ந்து போய் இருக்கும் வேலையில், இதனை பகிர்ந்த நடிகை ஸ்ரீதிவ்யா " கொரோனா புது அவதாரம் எடுக்கிறது... அதிக கவனம் தேவை.. யாரும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று முன்னெச்சரிக்கையாக கூறியுள்ளார்.