மாஸ்டர் ஆடியோ லான்ச் : வெறித்தனமான ஏற்பாடுகள்.. ஆனா 'இந்த' கார்டு இல்லாம உள்ளே போக முடியாது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, சிம்ரன், கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

மாஸ்டர் ஆடியோ லான்ச் விஜய், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதியை பார்க்க ஸ்மார்ட் கார்டு Master Audio launch This

இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று சென்னை லீலா பேலஸில் நடக்கிறது. முன் எப்போதும் இல்லாத முறையில் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொள்ளும் விழாவாக நடக்க போகிறது. படத்தின் குழு மற்றும் வெகு சில ரசிகர்கள் மட்டும் இதில் கலந்து கொள்கின்றனர்.

கடந்த பிகில் படத்தின் ஆடியோ லான்ச்சின் போது கொடுத்தது போலவே, இந்த படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு வருகை தருபவர்களுக்கு ஒரு டீ ஷர்ட் உடன் விழா அழைப்பு கொடுக்க பட்டுள்ளது. எனினும் இம்முறை சற்று வித்தியாசமாக ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸ்மார்ட் கார்டு' கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாரும் முறைகேடாக உள்ளே நுழைய முடியாது. பீகில் ஆடியோ லான்ச்சின் போது எதிர்பாராது நடந்த எந்த தவறும் இம்முறை நடக்க கூடாது என்பதில் படக்குழு மிக தெளிவாக இருக்கிறதாம்.

Entertainment sub editor