#BREAKING - விஜய்யின் மாஸ்டர் : ஆடியோ லான்ச்சுக்கு முன்னால் இவர்களை விஜய் ஏன் சந்திக்கிறார்..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் ஆடியோ லான்ச்சுக்கு முன்னால் விஜய்யின் சந்திப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.

மாஸ்டர் ஆடியோ லான்ச்சுக்கு முன்னால் விஜய்யின் சந்திப்பு | Vijay to Meet Tamilnadu Distributors Before Master Audio Launch.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் உள்ள லீலா பேலசில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நடிகர் விஜய், மாஸ்டர் படத்தை வெளியிடும் அனைத்து தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களுடனும் ஒரு சந்திப்பை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தின் வியாபரம் படத்தின் ரிலீஸுக்கு இரண்டு மாதங்கள் முன்பே முடிவடைந்ததாகவும், விநியோகஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய விலையில் படம் விற்கபட்டதால், அவர்கள் படத்தை நம்பி வாங்கியிருப்பதாகவும் தகவல் அறிந்த கோலிவுட் வாசிகள் தெரிவிக்கிறார்கள்.

Entertainment sub editor