மாஸ்டர் ஸ்பெஷல் : தளபதி விஜய் செட்ல எப்டி பேசுவாரு?... 96 கௌரி சொன்ன 'செம' சீக்ரெட்ஸ்..!!
முகப்பு > சினிமா செய்திகள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜய் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று (15.03.2020) நடைப்பெற்றது.
கல்லூரி சார்ந்த படம் என்பதால் இதில் நிறைய இளம் நடிகர்களும் நடிக்கின்றனர். அப்படி படத்தில் இணைந்திருப்பவர் தான் 96 படத்தின் இரண்டாம் கதாநாயகி ஆன கௌரி. இவரது நடிப்பு அந்த படத்தில் மிகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் BEHINDHOODS சேனலுக்கு அவர் கொடுத்திருக்கும் பிரத்தேயக பேட்டியில் நடிகர் விஜய் பற்றி அவர் கூறியிருப்பது "விஜய் அண்ணா செட்ல ரொம்ப நல்லா பேசுனாரு. ரொம்ப தாழ்மையா எல்லார் கிட்டயும் அன்பா இருப்பாரு. நான் விஜய் அண்ணா கிட்ட என் காலேஜ் கதை எல்லாம் கூட சொன்னேன்."என்று கூறியுள்ளார்.
பின்னும் தொடர்ந்த அவர் "அவர் செமயா ஜோக் பண்ணுவாரு. கலாய்ப்பாரு. என்னோட 96 படம் பார்த்தாராம். அதுல நான் நல்லா பண்ணி இருந்ததாகவும் சொன்னாரு. வாத்தி கம்மிங் பாடலுக்கு பிறகு தான் நான் படத்துல இணைந்தேன் அதனால அத மட்டும் மிஸ் பண்ணிட்டேன். அது கொஞ்சம் வருத்தமா இருந்தது. பர்ஸ்ட் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சாரு, அப்புறம் செமயா எங்க எல்லார் கூடவும் செட் ஆகிட்டாரு" என்று கூறியுள்ளார்.
மாஸ்டர் ஸ்பெஷல் : தளபதி விஜய் செட்ல எப்டி பேசுவாரு?... 96 கௌரி சொன்ன 'செம' சீக்ரெட்ஸ்..!! வீடியோ