''என்னை மேடையில் கூப்பிட்டு..'' - மாஸ்டர் விஜய்யுடன் தெறி ஆட்டம் போட்ட ஷாந்தனு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய்யுடன் ஆடிய ஷாந்தனு அது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் விஜய் குறித்து ஷாந்தனு கருத்து | shanthnu opens on master audio launch and actor vijay's dance with anirudh

விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் ஷாந்தனு மற்றும் அனிருத்துடன் இணைந்து ஒரு குட்டி ஆட்டம் போட்டார்.

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் அதுகுறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், 'கனவு நிஜமாகியது. 'எனது வேண்டுதலில் எப்போதும் நீ இருக்கிறாய்' என சொன்னதற்கு நன்றி விஜய் அண்ணா. மேலும் என்னை நடனமாட மேடைக்கு அழைத்து, நான் உங்கள் பாடலுக்கு ஆடிய ஸ்டெப்பை ஆடியதற்கும் நன்றி. இதன் காரணமாக தான் நீங்கள் மாஸ்டராகவும் இதயதளபதியாகவும் இருக்கிறார்கள். லவ் யூ அண்ணா'' என அவர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor