"வெட்கக்கேடு.. அதுக்கான நேரமா இது..?" - வறுத்தெடுத்த 'மாஸ்டர்' நடிகை... என்ன நடந்தது தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் நோய் கொரோனா.  சீனாவில் ஆரம்பித்து இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது.தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பது ஆகிருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இந்நோயை தொற்று நோய் என்று அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் கொரோனா காரணமா நடந்த மோசமான சம்பவம் குறித்து மாஸ்டர் நடிகை கருத்து Master Actress Gouri Quote An Shameful

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் மணிப்பூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 20-ம் தேதி கடைக்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை 'கொரோனா' என்று அழைத்து, அவர் மீது எச்சில் துப்பியுள்ளார். மோசமான இந்த சம்பவத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வன்மையாக கண்டித்தார். குற்றவாளி யாரென்று கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிக்கும் நடிகை கௌரி இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் "வெட்கக்கேடு... இது இனவாதத்திற்கான நேரம் இல்லை. நாம் எல்லாரும் தான் இதில் (கொரோனா) இருக்கிறோம்" துன்று கூறியுள்ளார்.

Entertainment sub editor