மாஸ்டர் நடிகையை ஜன்னலில் பார்த்து கால் செய்த நபர் - மேக் அப் இல்லாத ஃபோட்டோ ஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கண்ட நாள் முதல்' படத்தில் மிகச்சிறிய கதாப்பாத்திரத்தில் திரையில் தோன்றியவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்த அவர் ஒரு வலுவான கதாப்பாத்திரத்தை சித்தரித்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாகவும், முக்கிய வேடத்திலும் நடித்து வந்த அவருக்கு பாடல்கள் மீதும் அதிக ஈடுபாடு இருந்தது. 40 பாடல்களுக்கு மேல் பாடிய அவர் சில படங்களுக்கு டப்பிங்கும் செய்துள்ளார். வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் அவர் நடித்த சந்திரா கதாப்பாத்திரம் நல்ல அபிமானம் பெற்றுத் தந்தது.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் அனைவரும் தங்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். ஆண்ட்ரியாவும் வழக்கம்போல தன் வீட்டின் அறையில் இருந்தவாறு யோகா செய்து கொண்டு இருந்திருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டு நண்பர் சுந்தர் ராமுவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.

தன் வீட்டில் இருந்து ஆண்ட்ரியாவை நேரிடியாக பார்க்க முடிந்ததால் அங்கிருந்தே ஒரு ஃபோட்டோ ஷூட செய்யலாம் என்று இருவரும் ப்ளான் செய்திருக்கிறார்கள். இருவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த ஃபோட்டோ ஷூட்டை வெற்றிகரமாக முடித்துள்ளனர். மேக் அப் கிடையாது, லைட்டிங் கிடையாது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு புகைப்படத்தை ஆண்ட்ரியா தன் இன்ஸ்டாக்ராமில் பதிவேற்றியுள்ளார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

View this post on Instagram

I was up on my terrace doing yoga one evening when @soondah_wamu called. He said- ‘Hey Andy, I’m up on my terrace shooting some birds and I think I can see you. Turn to your right & wave!’ So I did that, and from afar, I saw a stick figure waving back at me. And that’s how ‘The Girl Next Door’ came to be... I did my first ever photoshoot with @soondah_wamu so I guess it’s some kind of poetic justice that we put together this no lights/no make-up long distance photoshoot during one of the toughest times our world has ever lived through... only goes to show you can find innovate ways of being creative while practising #socialdistancing & #selfisolation ... stay tuned for more 💗 P.S: I must add that these pictures were taken with my full consent & knowledge 🙂 #lockdown #thegirlnextdoor #staysafe #create 🌸

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Entertainment sub editor