RRR Others USA
www.garudabazaar.com

படத்தைப் பார்த்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்… அதை வெளியில் சொல்லாதது ஏன்? இயக்குனர் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Superstar Rajinikanth watched and praised maamanithan movie

மாமனிதன் திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னதாகவே நடிகர் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதாக இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

வெற்றிக்கூட்டணியின் நான்காவது படம்…

இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் இதுவரை தென் மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. அவர்கள் கூட்டணியில் நான்காவது படமாக மாமனிதன் உருவாகியுள்ள நிலையில் மே 20 ஆம் தேதி அந்த படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்காகப் பெற்றுள்ளார்.

Superstar Rajinikanth watched and praised maamanithan movie

இளையராஜா யுவன்ஷங்கர் ராஜா சங்கமம்…

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணையும் முதல் படமாக மாமனிதன் அமைந்துள்ளது. இந்த கூட்டணிக்காக படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பாடல்கள் வெளியாகும் என்றும் தெரிகிறது. மேலும் இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே தன்னுடைய YSR FILMS PVT LTD நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியோடு காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள படம் மாமனிதன். படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு…

இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக பெற்றிருந்த ஆர் கே சுரேஷ் திரைப்படம் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் ரிலீஸ் தேதி மே 20 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

Superstar Rajinikanth watched and praised maamanithan movie

மாமனிதன் பார்த்த ரஜினிகாந்த்…

இந்நிலையில் இப்போது இயக்குனர் சீனுராமசாமியின் டிவீட் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.  அதில் ‘ஜனவரியில் #மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் (ரஜினிகாந்த்) பேசியதை வெளியே சொல்லவில்லை அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள் நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார். நன்றி’ எனக் கூறியுள்ளார்.

அதுபோலவே படத்தின் விநியோகஸ்தர் ஆர் கே சுரேஷின் டிவீட்டில் ‘மாமனிதனை பாராட்டிய எங்கள் ரஜினிகாந்த் என்ற மாமனிதனுக்கு கோடான கோடி நன்றிகள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth watched and praised maamanithan movie

People looking for online information on Maamanithan, Rajinikanth, Seenu ramasamy, Vijay Sethupathi will find this news story useful.