அஜித் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின் ககுமனுவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
![Mankatha actor Ashwin Kakumanu blessed with a girl baby on his birthday Mankatha actor Ashwin Kakumanu blessed with a girl baby on his birthday](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/mankatha-actor-ashwin-kakumanu-blessed-with-a-girl-baby-on-his-birthday-news-1.jpg)
நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அஸ்வின் ககுமனு, சூர்யாவின் 7 ம் அறிவு, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, வேதாளம், சென்னை 28 இரண்டாம் இன்னிங்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு சோனாலி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அஸ்வினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவாரஸ்யமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், அஸ்வினின் பிறந்தநாளான ஜூலை.5ம் தேதியிலேயே தனக்கு மகள் பிறந்திருப்பதாகவும், இதை விட பெரிய சந்தோஷ் இருக்க முடியுமா? இனி இருவரின் பிறந்த நாளையும் ஒரே நாளில் கொண்டாடுவோம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், தனது மகளுக்கு அவிரா ரூபி ககுமனு என பெயரிட்டுள்ளதாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். அப்பாவான அஸ்வினுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.