கண்டிப்பா இதை நாங்க எல்லோரும் செய்வோம்- மங்காத்தா 2 எதிர்ப்பார்ப்பு குறித்து பகிரும் ராய் லக்ஷ்மி

தல அஜித் நடித்த ‘மங்காத்தா 2’ திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்புகள் குறித்து நடிகை ராய் லக்ஷ்மி பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
வெங்கட் பிரபு-அஜித் கூட்டணியில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் பார்ட்-2 சீசன் ட்ரெண்டாகி வருவதால், ‘மங்காத்தா 2’ எப்போது வரும் என இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்டு வந்த நிலையில், அஜித்துடன் நிச்சயம் ஒரு படம் பண்ணுவேன், ஆனால் அது மங்காத்தா 2-வா என தெரியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில், மங்காத்தா 2 திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்புகள் குறித்து நடிகை ராய் லக்ஷ்மி Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். ‘மங்காத்தா’ திரைப்படம் எதிர்ப்பார்க்காத வெற்றியை எனக்கு பெற்றுத் தந்த திரைப்படம். தல அஜித் உட்பட இந்த படத்தில் அனைவருக்குமே நெகட்டிவ் ரோல், அதிலும், நெகட்டிவ் ரோலில் நடித்த ஒரே பெண் நான் தான்.
ஒருவேளை மங்காத்தா 2 திரைப்படம் அறிவிக்கப்பட்டால், அதே கதையின் தொடர்ச்சியா அல்ல வேறு கதையா என்பது தெரியாது. ஆனால், அறிவிப்பு வெளியானதும் மங்காத்தா படத்தில் நடித்த அனைவரும், எனக்கு என் கேரக்டர் வேண்டும் என வெங்கட் பிரபு அலுவலகத்தில் சென்று அமர்ந்துவிடுவோம் என்றார். மேலும், அவர் நடித்து வரும் ‘நீயா 2’ படம் பற்றி பேசுகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு பாம்பு திரைப்படம் வருகிறது.
பாம்பு என்றாலே அனைவருக்கும் மனதில் ஒரு விதமான பயம் கலந்த உணர்வு இருக்கும். இந்த படத்தில் வரலக்ஷ்மி, கேத்ரின் தெரசா என பிற நாயகிகள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான டிராக் இருப்பதாக தெரிவித்தார். ‘வாமணன்’ திரைப்படத்திற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து நடிகர் ஜெய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
கண்டிப்பா இதை நாங்க எல்லோரும் செய்வோம்- மங்காத்தா 2 எதிர்ப்பார்ப்பு வீடியோ