மெர்சல், தெறிக்கு பிறகு மூன்றாவது முறையாக அட்லி - தளபதி விஜய் இணைந்திருக்கும் படம் 'பிகில்'. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவிற்கு நேற்று (ஜூலை 7) பிறந்தநாள் என்பதால் அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து இயக்குநர், அட்லி, பிரியா அட்லி படக்குழுவினர் விசில் (பிகில்) அடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த பதிவில், இது பிகில் பர்த்ட. ஒவ்வொரு நிமிடத்தையும் நேசித்தேன். வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்க்கும் அளவுக்கான பிறந்தநாள் இது. என்று பகிர்ந்துள்ளார்.
This is Huge!! Thank you everyone for the wishes!!! #Bigil Birthday it is! Loved every bit of it. Big thanks to all the frds for the tweets and wishes!! A birthday to be cherished forever in life!! pic.twitter.com/A2AdyWhnPK
— GK Vishnu (@dop_gkvishnu) July 7, 2019