பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ் மற்றும் கீர்த்தி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
![Music Director Amrish blessed with a girl baby Music Director Amrish blessed with a girl baby](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/music-director-amrish-blessed-with-a-girl-baby-photos-pictures-stills.jpg)
இசையமைப்பாளர் அம்ரீஷ் மற்றும் கீர்த்தி அனுஷாவிற்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அம்ரீஷ் தற்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக இருக்கிறார்.
‘சத்ரு’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சார்லி சாப்ளின்’, ‘வீரமாதேவி’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அம்ரீஷ் மற்றும் கீர்த்தி தம்பதிக்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது இவர்களது முதல் குழந்தையாகும். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.