www.garudabazaar.com
iTechUS

"KING அஜித்குமார்.. BLOCKBUSTER".. 'துணிவு' படம் பார்த்த PHOTO-வை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Vignesh Shivan Instagram Story about Thunivu Movie

Also Read | அறுவை சிகிச்சையா.? சீரியல் நடிகை ஆல்யா மானசாவுக்கு என்ன ஆச்சு? பரபரப்பு Post!!

பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vignesh Shivan Instagram Story about Thunivu Movie

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

Vignesh Shivan Instagram Story about Thunivu Movie

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Vignesh Shivan Instagram Story about Thunivu Movie

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அஜித்குமாரின் அடுத்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்தினை பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், "தியேட்டரில் அரசர் அஜித்குமாரை கண்டு ரசிப்பதே அலாதியானது.  துணிவு படத்தில் அஜித் குமாரின் ஸ்டைல் ஈடு இணையற்றது. அனைத்து விதத்திலும் துணிவு படம் பிளாக் பஸ்டர" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

Also Read | மாறுபட்ட தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் & நானி.. இணையத்தில் வைரலாகும் வேறமாரி 'தசரா' BTS!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Instagram Story about Thunivu Movie

People looking for online information on Thunivu Movie, Vignesh shivan, Vignesh Shivan Instagram Story will find this news story useful.