சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியா பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மல்யுத்த வீராங்கனையாக நடிக்கவிருக்கிறார். ‘சலீம்’,‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படங்களை இயக்கிய நிர்மல் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தை இயக்குகிறார்.
இப்படம் கடந்த 2017ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கோதா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் என கூறப்பட்டு வந்த நிலையில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். கோதா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறீர்களா என்றதற்கு, பொய்யான செய்தி என ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் அளித்துள்ளார்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக உதய் ஷங்கர் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
False news. Pls.
— aishwarya rajessh (@aishu_dil) March 6, 2019