Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

"ஆரம்பிச்சாச்சு.. ஆபரேஷன் க்ளீனிங்".. அத்தன பேரும் நாமினேட் பண்ணிய அந்த 2 பேர்! BBUltimate Tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss Ultimate: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்ஷனில், அதாவது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நாளும் நாளும் ரண களமான மற்றும் விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

2 contestant nominated for not contributed in BBUltimate house

போட்டியாளர்கள் விபரம்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. அத்துடன் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஒரு வார ஹைலைட்ஸ் அனைத்தும் ஞாயிறுகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுள் சுரேஷ் தாத்தா எலிமினேட் ஆகிவிட்டார்.

Also Read: "நீங்க மட்டும் வுமன் அபியூஸ் பண்லயா?".. கடுப்பில் பாலாஜியை சுருதி கேட்ட சர்ச்சை கேள்வி 

கோள்மூட்டுனா தான் சுவாரஸ்யம்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுளது. அதன்படி, “எல்லாவற்றிலும் பங்கெடுத்துக் கொள்ளாத நபர்களை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள்” என்று பிக்பாஸ் அறிவுறுத்துகிறார்.  அதற்கு தாமரை, அனிதா, வனிதா, சினேகன் உள்ளிட்ட ஜூலியை குறிப்பிடுகின்றனர். 

அப்போது சினேகன், “கோவமாக இருந்தாலும், கோள் மூட்டுறதா இருந்தாலும் அதை செஞ்சா தான் சுவாரஸ்யமாக இருக்கும்.. ஆனால் ஜூலியிடம் அது இல்லை” என்பது போல் சொல்லி, ஜூலியை நாமினேட் செய்கிறார். 

வனிதா அக்கா

இதேபோல், பாலாஜி முருகதாஸ், சுருதி, அபிராமி, ஜூலி உள்ளிட்டோர் வனிதாவை குறிப்பிட்டு,  “வனிதா அக்கா பேசவோ, விதிகளை போடவோ செய்கிறார். ஆனால் அவர் எல்லா விஷயங்களிலும் பங்கெடுத்துக் கொள்வதாக தெரியவில்லை!” என சொல்லி நாமினேட் செய்கின்றனர்.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க், காபி பொடி பிரச்சனை, திருடன் போலீஸ் டாஸ்கில் கோவப்பட்டு வீட்டையே உடைத்துவிடுவேன் என சொன்னது, தற்போது அவருக்கும் ஜூலிக்குமான சண்டைகள் உள்ளிட்டவற்றால் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்சேஷனலாக இருக்கிறார்.

எனினும் அவரும் ஜூலியை போலவே, பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவருடனான பங்களிப்பை கொடுக்காமல் இருப்பதாக ஹவுஸ்மேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 மணி நேரமும்

டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து,  ஒருநாள் முழுவதும் நடக்கும் ஹைலைட்ஸ் விஷயங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு , அன்றைய நாட்களின் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில்  இரவு 9 மணிக்கு ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "சத்தியமா செத்துருவேன் ஜூலி".. "பண்ணுங்க வனிதா அக்கா".. ஜூலியின் அசுர ஆட்டம் Started!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

2 contestant nominated for not contributed in BBUltimate house

People looking for online information on BBUltimate Tamil, Bigg Boss Anitha, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Tamil, Julie, Thamarai Selvi, Vanitha, Vanitha Vijayakumar will find this news story useful.