Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

BBUltimate: "சத்தியமா செத்துருவேன் Julie".. "பண்ணுங்க Vanitha அக்கா".. ஜூலியின் அசுர ஆட்டம் Started!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss Tamil, 11, பிப்ரவரி 2022: டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்ஷன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி நாளும் நாளும் விறுவிறுப்பாக போகிறது.

i will die Vanitha to julie, here is her reply bigg boss ultimate

போட்டியாளர்கள்

இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆனார்.

Also Read: "நீங்க மட்டும் வுமன் அபியூஸ் பண்லயா?".. கடுப்பில் பாலாஜியிடம் சுருதி கேட்ட ‘பொசுக்’ கேள்வி 

காபி பொடி பிரச்சனை

i will die Vanitha to julie, here is her reply bigg boss ultimate

இந்த ஷோவில் முதல் வாரம் காபி பொடி பிரச்சனையில் ஆவேசமாகவும், பின்னர் அழுதும் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தார். பின்னர், பிக்பாஸ் வீட்டின் நாட்டாமை என்கிற சிறப்பு பட்டத்தையும் வனிதா பெற்றிருந்தார். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் அடுத்து பரபரப்பை ஏற்படுத்தும் புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

திருடன் போலீஸ் டாஸ்க்

ஆம், அதுதான் திருடன் போலீஸ் டாஸ்க், என்ன தான் பார்க்க ஜாலியான டாஸ்க்காக இது தோன்றினாலும் இதிலேயே போட்டியாளர்களிடையே வாக்குவாதம், மோதம், முட்டல், உரசல், முரண், பிரச்சனை என அனைத்து வெடித்துள்ளது. குறிப்பாக வனிதாவுக்கும் ஜூலிக்கும், தாமரைக்கும் ஜூலிக்கும், தாமரைக்கும் சுஜாவுக்கும் அடுத்தடுத்து சண்டைகள் வலுப்பெற்று வருகின்றன.

பிஞ்சிரும் ஜூலி..

i will die Vanitha to julie, here is her reply bigg boss ultimate

முன்னதாக தம்முடைய பெர்சனல் பொருட்களை உடைத்ததால் கோபம் அடைந்த வனிதா, அதன் பின்பு, ஜூலி தனது பெர்ஃபியூமை எடுத்ததற்காக அவரை விசாரித்தார். அப்போது, “தெரியாத மாதிரி நடிக்காத ஜூலி.. பிஞ்சிரும் .. எதுல போட்ட? செண்ட் பாட்டில டாய்லட்ல போட்டியா? அசிங்கமா இல்ல? அது எவ்வளவு விலை உயர்ந்தது ? பொருளோட மதிப்பு தெரியாதா?” என வனிதா காட்டமாக பேசினார்.

எல்லாத்தையும் உடைச்சுடுவேன்

i will die Vanitha to julie, here is her reply bigg boss ultimate

இதேபோல் இன்னொரு சமயத்தில்,  போலீஸான ஜூலி நகையை எடுத்து வைத்துக்கொள்ள, டென்ஷனான வனிதா, “எப்படி எடுத்தியோ, அப்படியே வை.. இந்த டிராமா கம்பெனிலாம் பண்ணினா, எல்லாத்தையும் உடைச்சுடுவேன் வீட்ல” என ஆவேசமானர். பின்னர் ஜூலி கையில் இருந்து அந்த ரிங்கை வனிதா இழுக்க, அதற்கு ஆவேசமான ஜூலி, வனிதாவை பார்த்து , தொண்டை கிழிய கத்தி சண்டையிட்டார்.

சத்தியமா செத்துருவேன் Julie.. 

i will die Vanitha to julie, here is her reply bigg boss ultimate

பதிலுக்கு வனிதாவும் “ஜூலி மூடிட்டு போ.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத” என சொல்ல, பதிலுக்கு ஜூலி, “நான் அழவே இல்ல.. என் கண்ண பாருங்க.” என சொல்லி வனிதாவுக்கு டோஸ் கொடுத்தார் ஜூலி. இந்நிலையில் தான், ஜூலியால் டென்ஷன் ஆவதாக சொல்லி வனிதா, “நான் சத்தியமாக செத்து விடுவேன்” என சொல்ல, ‘ஜூலியும் போங்க.. செத்து போங்க’ என்று சொல்கிறார். முன்னதாக வனிதாவுக்கு ஜூலி ஹார்டின் கொடுக்காதபோது இவர்களுக்குள் இந்த முரண்கள் தொடங்கின. இது எதுவரை போக போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் அல்டிமேட்

i will die Vanitha to julie, here is her reply bigg boss ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது. ஒருநாள் முழுவதும் நடக்கும் ஹைலைட்ஸ் விஷயங்கள் அனைத்தும், அன்றைய நாட்களின் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில்  இரவில் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Also Read: வர்லாம்.. வர்லாம் வா.. வனிதாவைத் தொடர்ந்து ஜூலி Vs தாமரை .. ஆரம்பமாகுது அனல் பறக்கும் வாதம்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

i will die Vanitha to julie, here is her reply bigg boss ultimate

People looking for online information on BB Ultimate, BB Ultimate Tamil, Bigg Boss Tamil, BiggBoss Ultimate Tamil, DisneyHotstar Tamil, Julie, Vanitha Vikayakumar, Vanitha vs Julie will find this news story useful.