www.garudabazaar.com

LATEST: "கர்ணன்" பட பிரபலத்துடன் புதிய படத்தில் இணையும் மம்முட்டி! சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள மெகாஸ்டார் மம்முட்டி மற்றும் பார்வதி திருவொத் ஆகியோர் 'புழு' படத்தில் முக்கிய வேடங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

malayalam mega star mammootty next film Puzhu update

இந்த படத்தின் பூஜை கேரள புத்தாண்டான ஸிங்கம் மாதம் முதல் நாளான இன்று (17.08.2021) எர்ணாகுளம் சாய்ஸ் பள்ளியில் நடைபெற்றது. புதுமுகம் ரத்தின ஷர்ஷாத் "புழு" படத்தை இயக்குகிறார். ஸின் - ஸில் செல்லுலாய்ட் பேனரில் எஸ். ஜார்ஜ் தயாரிக்கிறார்.இந்த படத்தை துல்கர் சல்மானின் வே ஃபெரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து விநியோகிக்கிறது.

malayalam mega star mammootty next film Puzhu update

வைரஸ் படத்துக்குப் பிறகு, ஷராஃப் மற்றும் சுஹாஸ் ஹர்ஷத்துடன் இணைந்து படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதியுள்ளனர். மம்முட்டி மற்றும் பார்வதி ஆகியோருடன், நெடுமுடி வேணு, இந்திரன் மற்றும் மாளவிகா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

malayalam mega star mammootty next film Puzhu update

கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே பேரன்பு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டார். மனு ஜெகத், பாகுபலி மற்றும் மின்னல் முரளி போன்ற படங்களின் கலை இயக்குனர், "புழு" படத்திலும் கலை இயக்குநராக பணியாற்ற உள்ளார். எடிட்டராக தீபு ஜோசப்பும், இசையமைப்பாளராக ஜாக் பிஜோய்யும் பணியாற்றுகின்றனர்.

malayalam mega star mammootty next film Puzhu update

படத்தின் முக்கிய படப்பிடிப்பு இடங்களாக எர்ணாகுளம் மற்றும் குட்டிக்கானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

malayalam mega star mammootty next film Puzhu update

People looking for online information on Mammootty, Parvathy Thiruvothu, Puzhu, Theni Eswar will find this news story useful.