Sandunes Others
RRR Others USA
www.garudabazaar.com

தளபதி விஜய்யை தொடர்ந்து மைக்கேலாகும் மம்முட்டி! வெளிவந்த Mass Look Poster!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள மொழியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.

Bheeshma Parvam Charecter Look Poster Released

இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை சமூக ஊடகங்களில் மம்முட்டி பிறந்தநாள் அன்று வெளியிட்டனர். மேலும் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் கதாபாத்திர போஸ்டர்கள் பல ரிலீஸ் ஆகின. அதனைத்தொடர்ந்து பீஷ்ம பர்வம் படத்தின்  மம்முட்டி கதாபாத்திர போஸ்டரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அமல் நீரத் தன்னுடைய முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் மம்முட்டி மைக்கேல் என்னும் பெயரில் கேங்கஸ்டராக நடிக்கிறார். 2019ல் வெளியான பிகில் படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல். தற்போது மம்முட்டி மைக்கேலாக நடித்துள்ளார்.

Bheeshma Parvam Charecter Look Poster Released

தேவதாத் ஷாஜி, அமல் நீரத் ஆகியோருடன் இணைந்து அமல் நீரத் எழுதிய பீஷ்ம பர்வம் கேங்க்ஸ்டர் டிராமா வகைமையில் இந்தப்படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சவுபின் ஷாஹிர், நதியா மொயுடு, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, ஃபர்ஹான் ஃபாசில், வீணா நந்தகுமார்,  அனசூயா, மாலா பார்வதி மற்றும் லீனா ஆகியோர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கின்றனர். பிரேமம் பட ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பீஸ்ட் ட்ரீட் விஜய் ரசிகர்களுக்கு எப்போது.. நெல்சன் திலீப் குமார் மாஸ் அப்டேட்!

 

Bheeshma Parvam Charecter Look Poster Released

புத்தாண்டை முன்னிட்டு பீஷ்ம பர்வம் படத்தின்  படக்குழு படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மம்முட்டி ரசிகர்கள் போஸ்டர் அப்டேட்டை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்தபடம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு மம்முட்டி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில்  நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை நடித்துள்ளார்.

Bheeshma Parvam Charecter Look Poster Released

மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சிலநாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மம்முட்டி உடன் ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.

Bheeshma Parvam Charecter Look Poster Released

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி! வெளியான OFFICIAL அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Bheeshma Parvam Charecter Look Poster Released

People looking for online information on விஜய், Bheeshma Parvam, Mammootty, Mass Look Poster will find this news story useful.