www.garudabazaar.com

வேட்டி கட்டி அசத்திய மாளவிகா மோகனன்.. வாழ்க்கை முழுவதும் இது தான்! வைரல் போஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டி கட்டி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan Instagram post about Wearing Veshti At home

Also Read | TRENDING: அடடே..ராஷ்மிகாவை தொடர்ந்து White T Series-ல் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே!

தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார்.  தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் மாறன் படத்தில் நடித்தார்.

Malavika Mohanan Instagram post about Wearing Veshti At home

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

Malavika Mohanan Instagram post about Wearing Veshti At home

இந்நிலையில் மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.   அந்த புகைப்படங்களில் கருநீல நிற வேட்டி கட்டி  கையில் பழச்சாறு குடிப்பது போல் தோன்றியுள்ளார். காலுக்கு மிஞ்சியும் கைக்கு வளையலும் அணிந்துள்ளார். மேலும் "வாழ்நாள் முழுவதும் வேட்டி கட்டுபவர்" என ஒரு ரசிகருக்கு பதிலும் அளித்துள்ளார்.

Malavika Mohanan Instagram post about Wearing Veshti At home

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து இசை வீடியோவில் நடித்துள்ளார். TAUBA என்ற இந்த இசை வீடியோவில் மாளவிகா மோகனன் & பாட்ஷா நடனமாடி நடித்துள்ளனர். கடந்த (24.06.2022) அன்று இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | நயன்தாராவின் 75-வது திரைப்படம்.. மாஸ் வீடியோவுடன் வெளியான புதுப்பட அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Instagram post about Wearing Veshti At home

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan Instagram post, Malavika Mohanan Wearing Veshti will find this news story useful.