LIGER D Logo Top
www.garudabazaar.com

பிரபல போட்டோகிராபர் உடன் இணைந்து போட்டோ ஷூட்.. Monochrome -ல் கலக்கிய மாளவிகா மோகனன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot with Photographer Roy

Also Read | 'LIGER' முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடி ரூபாயா? மாஸ் சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா!

2013 ஆம் ஆண்டில் வெளியான பட்டம் போலே எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot with Photographer Roy

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot with Photographer Roy

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இத்தாலி & மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், இத்தாலி & மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot with Photographer Roy

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல போட்டோகிராபர் ராய் உடன் இணைந்து சிவப்பு நிற மோனோக்ரோம் ஸ்டைலில் உடையில் நவநாகரீக தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot with Photographer Roy

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து இசை வீடியோவில் நடித்துள்ளார். TAUBA என்ற இந்த இசை வீடியோவில் மாளவிகா மோகனன் & பாட்ஷா நடனமாடி நடித்தனர்.

கடந்த (24.06.2022) அன்று இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ஆலியா பட் போட்டோஷூட்.. அவரே சொன்ன சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Latest Monochrome Photoshoot with Photographer Roy

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan Latest Photoshoot will find this news story useful.