www.garudabazaar.com

"வடக்கனும் கிழக்கனும்".. "சக ஏழை மனிதன் தான்".. விஜய் ஆண்டனியின் பரபரப்பு ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனியின் சமீபத்திய ட்வீட் கவனத்தை பெற்று வருகிறது.

Vijay Anthony Latest Tweet about Immigration Workers

Images are subject to © copyright to their respective owners.

Also Read | காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஆர்த்தி.. தாலிக்கு குங்குமம் இட்ட ஜெயம் ரவி!

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

Vijay Anthony Latest Tweet about Immigration Workers

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரன் படத்தோடு மழை பிடிக்காத மனிதன் படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

Vijay Anthony Latest Tweet about Immigration Workers

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், "வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்...   நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர். ANTI BIKILI" என ட்வீட் செய்துள்ளார். 36 ஆயிரம் ரீட்வீட்களை கடந்தும், 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து ம் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | சித்தார்த் & கியாரா திருமணம்.. வேறமாரி சர்ப்ரைஸ் கொடுத்த ஷங்கர் - ராம் சரண் - தில் ராஜூ!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Anthony Latest Tweet about Immigration Workers

People looking for online information on Pichaikaaran 2, Vijay Antony, Vijay Antony Latest Tweet will find this news story useful.