www.garudabazaar.com
iTechUS

SAC ஐ அடுத்து விஜய் குடும்பத்தில் இன்னொரு டைரக்டரா.? SHOOTING SPOT -ல் சஞ்சய் .. வைரல் வீடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது.

Vijay son Jason Sanjay working on a film video surfaces

இந்த திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி இருந்தார். இதில், நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும், வாரிசு திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் படம் வசூல் செய்துள்ளதாகவும் அதிகார்பூர்வ தகவலும் வெளியாகி இருந்தது.

வாரிசு படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 67 என குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றது. லோகேஷ் செல்லும் இடம் எல்லாம் இந்த படம் பற்றி கேட்கப்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அதிகாரபூர்வ அப்டேட் வரும் என்பதையும் லோகேஷ் சூசகமாக தெரிவித்திருந்தார். இதனை எதிர்பார்த்தும் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், லோகேஷ் இதற்கு முன்பு இயக்கி இருந்த கைதி, விக்ரம் படங்களுடன் லோகேஷ் யூனிவர்ஸில் இந்த படம் இணையுமா என்பது குறித்தும், படத்தில் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் கடும் ஆவலில் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், ஒரு குறும்படம் அல்லது பைலட் படத்தின் படப்பிடிப்பில் பணிபுரிவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவின் படி, ஜேசன் சஞ்சய் உள்ளிட்ட சிலர் இணைந்து குறும்படம் அல்லது பைலட் ஃபிலிம் ஒன்றை உருவாக்குவது போல தெரிகிறது. அதே போல, வீடியோவில் இருக்கும் அனைவரும் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் சூழலில், வெளிநாட்டில் உருவாகி வரும் ஒரு படைப்பு என்பதும் தெரிய வருகிறது.

முன்னதாக, ஜேசன் சஞ்சய், தந்தை விஜய் நடித்திருந்த வேட்டைக்காரன் படத்தில் பாடல் ஒன்றில் தோன்றி இருந்தியார். அதன் பின்னர் வெளிநாட்டில் படித்து சில குறும்படங்களையும் அவர் உருவாக்கி இருந்தார். இதற்கடுத்து தற்போது ஒரு குறும்படத்தில் அவர் பணியாற்றி வருவது போன்றும் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், ஆங்கிலத்தில் தற்போது குறும்படத்தை இயக்கி வருகிறார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மறுபக்கம், தனது தாத்தாவும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் போல பேரனும் இயக்குனராக வருங்காலத்தில் வலம் வருவார் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

SAC ஐ அடுத்து விஜய் குடும்பத்தில் இன்னொரு டைரக்டரா.? SHOOTING SPOT -ல் சஞ்சய் .. வைரல் வீடியோ.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay son Jason Sanjay working on a film video surfaces

People looking for online information on Jason Sanjay, Vijay will find this news story useful.