www.garudabazaar.com
iTechUS

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிரபு சாலமனின் 'செம்பி'.. எப்போ? எதுல?.. Official தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகி கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் 'செம்பி'.

Prabhu Solomon Sembi stream on Hotstar from February 3

இந்த படத்தில் நடிகை கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் 'குக் வித் கோமாளி' புகழ் அஷ்வின் குமார், தம்பி ராமையா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 10 வயது பேத்திக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அவரது பாட்டியாக ஒரு பழங்குடி பெண்ணாக வரும் கோவை சரளா போராடுவது தான் 'செம்பி' -யின் கதை. தமிழ் திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகை கோவை சரளா இதுவரையிலும் கண்டிராத வித்தியாசமான பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

செம்பி திரை அரங்குகளில் மக்கள் மத்தியில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா செம்பி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது செம்பி படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என்னும் பிரபல ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Prabhu Solomon Sembi stream on Hotstar from February 3

People looking for online information on Ashwin, Disney Hotstar, Kovai sarala, Prabhu Solomon, Sembi will find this news story useful.