''கவின் பன்றது Worstu Strategy'' - 'சரவணன் மீனாட்சி' இயக்குநர் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 24, 2019 12:29 PM
'சரவணன் மீனாட்சி' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். பின்னர் 'நட்புனா என்னனு தெரியுமா ?' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அவர், லாஸ்லியாவுடன் காதல் விவகாரங்கள் உள்ளிட்டவற்றால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடரின் இயக்குநர் பிரவீன் பென்னட் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சாய் பிரமோதிதாவும் கவின் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய பிரவீன், கவின் இப்போது சாண்டியுடன் எப்படி பழுகிறாரோ அப்படித்தான் என்னிடம் பழகுவார். ரொம்ப அமைதியானர். ஆனால் அவர் என்ன காரணத்துக்காக கவின் பிக்பாஸ் போனோரோ அத மறந்துடுறார். அது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. முட்ட டாஸ்க்கில் லாஸ்லியா முட்டை உடைந்ததும் இவன் ஏன் முட்டைய உடச்சான்? .
இப்போ உள்ள போய் ஜெய்ச்சுட்டு வா. இப்போ இருக்க சப்போர்டர்ஸ் மட்டுமில்ல. எல்லோருமே சப்போர்ட் பண்ணுவாங்க. கவின் வேஸ்ட்டுனு நான் எப்பவுமே சொல்லல. அவன் ஜெய்க்கனும்னு தான் என்னோட ஆசை. கவின் பன்றது Worstu Strategy. நீ லவ் பண்ணு. நான் அத தப்பு சொல்லல. ஆனா லவ்வ ஒரு தொழிலாவே பண்ணக்கூடாதுல. என்றார்.
''கவின் பன்றது WORSTU STRATEGY'' - 'சரவணன் மீனாட்சி' இயக்குநர் அதிரடி வீடியோ