www.garudabazaar.com

யாசகம் செய்து வந்த முதியவருக்காக.. சூரி ரசிகர்கள் செய்த காரியம்.. நெகிழ வைக்கும் பின்னணி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மதுரையில் உள்ள சூரி ரசிகர் மன்றத்தினர் யாசகம் செய்து வந்த ஒரு முதியவருக்காக செய்த விஷயம், தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

Madurai soori fans help old man transform him by give food and new dress

Also Read | Thalapathy67 : நாயகி திரிஷா? வில்லன் இவரா? விஜய் நடிக்கும் தளபதி 67 .. அடுத்தடுத்த தெறி அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூரி. வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்திருந்த சூரி, அதில் பரோட்டா சாப்பிடும் காமெடி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி இருந்தார்.

இதன் காரணமாக, பரோட்டா சூரி என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது. சமீபத்தில், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வேலன், டான், விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார் சூரி. இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கம் 'விடுதலை' திரைப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் சூரி நடித்து வருகிறார்.

Madurai soori fans help old man transform him by give food and new dress

இந்த நிலையில், நடிகர் சூரி ரசிகர் மன்றத்தினர் செய்த விஷயம் ஒன்று, தற்போது பலரையும் நெகிழ வைத்து வருகிறது.

மதுரையின் பல்வேறு பகுதிகளில் உணவகங்கள் நடத்தி வருகிறார் நடிகர் சூரி. அப்படி ஒரு சூழலில், அவரது ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஏராளமானோருக்கு செய்து வருகின்றனர். இதற்கு மத்தியில், மதுரை தெருக்களில் குப்பைகளை அள்ளி யாசகம் செய்து வந்த ஒரு முதியவரை அழைத்து சென்ற சூரி ரசிகர்கள், அவருக்கு முடி வெட்டி, குளிப்பாட்டி உள்ளனர்.

Madurai soori fans help old man transform him by give food and new dress

அது மட்டுமில்லாமல், புதிய ஆடைகள் வாங்கி அவருக்கு அணிவித்த சூரி ரசிகர் மன்றத்தினர், அந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்ததாகவும் தெரிகிறது. முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் அந்த யாசகம் செய்து வந்த நபரை மாற்றியுள்ள விஷயம், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், சூரி ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | இனியா நடிக்கும் ‘காஃபி’ த்ரில்லர் படம்.. நவ 27-ல் பிரபல டிவி சேனலில் நேரடி ரிலீஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

Madurai soori fans help old man transform him by give food and new dress

People looking for online information on Dress, Food, Madurai soori fans, Soori will find this news story useful.