பிரபல வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணாமாக நேற்று (ஜூன்.10) பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன், அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றதைதொடர்ந்து கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
கிரேஸி மோகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த கமல்ஹாசன், மோகனின் உயிர் பிரியும் போது அவரது உடன் பிறந்த சகோதரரை போல் கிரேஸி மோகனின் நெற்றியில் கை வைத்து அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இருவரது நட்பும் திரைப்படங்களையும் தாண்டி என்றைக்கும் நிலைத்திருக்கும்.
இந்நிலையில், கிரேஸி மோகனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கிரேஸி மோகனின் கடைசி நிமிடங்களிலும், இறுதிச்சடங்கிலும் கலந்துக் கொண்ட கமல்ஹாசன் கண்ணீர் மல்க தனது நண்பரை வழியனுப்பியுள்ளார்.
கிரேஸி மோகன் இறுதிச்சடங்கில் கண் கலங்கிய கமல்ஹாசன் - வீடியோ வீடியோ