திரைப்பட வசனகர்த்தா, நாடக எழுத்தாளர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் கிரேஸி மோகன். இவர் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இவரது மறைவிற்கு பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக கிரேஸி மோகனுடன் பழகிய அனுபவங்கள் குறித்து Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அதில், நான் முதன் முதலில் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடுவது என் வீட்டிற்கு தெரியாது. பிறகு கிரேஸி மோகனுடன் சேர்ந்து நாடகத்தில் நடித்துவந்தேன். அப்போது என் பெற்றோரிடம் நான் நடிப்பதற்காக அவர் தான் சம்மதம் வாங்கினார்.
அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட அவர் நாடகங்களில் நடிக்கும் ஒருவருக்கு திரைப்படங்களில் ஏதாவது வாய்ப்பு வந்தால் சொல்லுடா என்று கேட்டார்.
அவர் இறப்பதற்கு 10 நாட்கள் முன்பு கூட நாகேஷ் சாருக்கு பிறகு எனக்கு படித்தது சதீஸ் தான் என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அவரை கடைசியா மரணப்படுக்கையில் பார்த்து அழுதுவிட்டேன் என்றார்.
''நாகேஷ் சாருக்கு பிறகு எனக்குப் பிடித்தது சதீஸ் தான் என்றார்'' வீடியோ