தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும் வசனகர்த்தாவாகவும் விளங்கியவர் கிரேஸி மோகன். இவரது நகைச்சுவை வசனங்களால் பெரும்பாலான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கிரேஸி மோகன் மரணமைடைந்தார். இவரது மறைவு திரையுலகினர் மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து இவரது படங்களில் இடம் பெற்ற வசனங்களை பதிவு செய்து ரசிகர்கள் கிரேஸி மோகனை நினைவு கூர்ந்தனர். கிரேஸி மோகன் வசனம் எழுதிய படங்களான மகளிர் மட்டும், அவ்வை சண்முகி போன்ற படங்களில் நடிகர் நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கிரேஸி மோகன் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்தார். நிகழ்வில் அவர் பேசியதாவது, கிரேஸி மோகனின் மரணம் செய்தி கேட்டவுடன் பேரதிர்ச்சியாக இருந்தது. கிரேஸி மோகனின் தனித்துவமாக நான் பார்ப்பது வெறும் நகைச்சுவை என்றில்லாமல், கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற வகையில் அந்த நகைச்சுவை இருக்கும். அந்த தனித்தன்மையை அவர் பெற்றிருந்தாரு.
அதனால் தான் கமல்சாரும் அவரும் நல்ல சிங்க் ஆனாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண படங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். என்னோட பாக்கியம் அவங்க ரெண்டு பேரு கூட சேர்ந்து வேலை பார்த்தது.
குறிப்பாக அவ்வை சண்முகி. அந்த படம் ஆரம்பிச்சதும் தெரியாது முடிச்சதும் தெரியாது. அவ்வளவு சிரிப்புக்கு நடுவுலயே நடந்தது. சிரிப்புனா படத்துல மட்டும் கிடையாது.
அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இப்போ ரைட்டிங் என்பதே இல்லாம போச்சு தமிழ் சினிமாவில். இவர் நல்ல ஓவியர். ஒரு காலத்துல அவர் டிராமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு நின்னுருக்கேன். என்றார்.
''பேரதிர்ச்சியா இருந்துச்சு'' - கிரேஸி மோகனின் மறைவு குறித்து நாசர் வருத்தம் வீடியோ