கிரேஸி மோகனுக்கு இறுதி அஞ்சலி - சிவகார்த்திகேயன் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட வசனகர்த்தாவும் நடிகருமான கிரேஸி மோகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (10.06.2019) அன்று மரணமடைந்தார்.

Sivakarthikeyan pays last respect to Crazy Mohan

கிரேஸி மோகனின் மறைவிற்கு தமிழ் திரையுலகில் பெரும்பாலானோர் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் கிரேஸி மோகனின் சகோதரர் பாலாஜி மற்றும் சதீஸுடன் நீண்ட நேரம் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்.

நடிகை கௌதமி, கிரேஸி மோகனுடனான அனுபவங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் நேரில் வந்து கிரேஸி மோகனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

மேலும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய், தயாரிப்பாளர் டி.சிவா, பிரஷாந்த், விவேக் ஆகியோர் கலந்துகொண்டு கிரேஸி மோகனின் உடலுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

கிரேஸி மோகனுக்கு இறுதி அஞ்சலி - சிவகார்த்திகேயன் உருக்கம் வீடியோ