Nenjuku Needhi

மாதவன் இயக்கி நடிக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தின் புதிய Motion போஸ்டர்… இணையத்தில் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madhavan directional debut Rocketry movie motion poster

Also Read | “சார் One More-லாம் கேக்கலாமா?...” - உலகநாயகனின் ரியாக்ஷன் என்ன –லோகேஷ் Exclusive

ராக்கெட்ரி தொடக்கம்…

2017 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்! (Rocketry - The Nambi Effect) எனும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினார் நடிகர் மாதவன். கிரையோஜனிக் இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின் பல ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

உருவாக்கம்…

2019 ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்குகிறார். இது அவர் இயக்கும் முதல் திரைப்படமாகும். இந்த படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் என நான்கு மொழிகளில் உருவாகிறது. மலையாளம், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் வேளையில் படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.

Madhavan directional debut Rocketry movie motion poster

புதிய மோஷன் போஸ்டர்…

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. அங்கு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. படத்தின் பிரிமீயருக்காக மாதவன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் புதிய மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. விண்வெளியில் நம்பிராஜனின் உருவம் தோன்றுவது போல வித்தியாசமாக இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

Madhavan directional debut Rocketry movie motion poster

மேலும் இந்த போஸ்டரில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதனால் தமிழில் இந்த படத்தை ரெட் ஜெய்ண்ட்ஸ் வெளியிடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madhavan directional debut Rocketry movie motion poster

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Madhavan directional debut Rocketry movie motion poster

People looking for online information on மாதவன், ராக்கெட்ரி, Madhavan, Rocketry movie, Rocketry movie motion poster will find this news story useful.