www.garudabazaar.com

இந்தி விக்ரம் வேதால இவர் நடிப்ப பார்த்து மிரண்டு போயிட்டேன்!- வைரலாகும் மாதவன் Tweet!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

vikram vedha hindhi remake madhavan saif ali khan

Neo Noir வகைமையில் உருவான இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்து இருந்தார். Noir வகைமைக்கு ஏற்றாற் போல் மோனோ க்ரோம் டோனில் படத்தின் ஒளிப்பதிவு அமைந்திருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர்.

vikram vedha hindhi remake madhavan saif ali khan

இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியுள்ளது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து,அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

vikram vedha hindhi remake madhavan saif ali khan

புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், வேதா விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார்.

vikram vedha hindhi remake madhavan saif ali khan

இந்நிலையில் துபாயில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் மாதவன் விருந்தாளியாக சென்றுள்ளார். அங்கு படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் நடிப்பையும் தோற்றத்தையும் பாராட்டியுள்ளார். ஹிர்த்திக் ரோஷன் இந்த படத்தில் தாதாவாக நடிப்பதால் அவரின் தோற்றம் உலகத்தை ஆளும் அரசன் போல் உள்ளது என்றும், இந்த படத்தின் திரைக்கதை வரலாற்று காவியத்தன்மைமிக்கதாக உள்ளதாக கூறியுள்ளார். 

இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vikram vedha hindhi remake madhavan saif ali khan

People looking for online information on Hrithik Roshan, Madhavan, Saif Ali Khan, Sam C S, Vijay Sethupathy will find this news story useful.