Nenjuku Needhi

“என்ன Series பாக்கலாம்?” ... மாளவிகாவின் tweet-க்கு கார்த்தி சிதம்பரத்தின் வைரல் reply

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனின் டிவீட்டில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்த கமெண்ட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Karthi P Chidambaram reply to malavika mohanan tweet went viral

Also Read | “சார் One More-லாம் கேக்கலாமா?...” - உலகநாயகனின் ரியாக்ஷன் என்ன –லோகேஷ் Exclusive

மாளவிகா மோகனன்…

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சார்ந்த இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனின் மகள் ஆவார்.  ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

Karthi P Chidambaram reply to malavika mohanan tweet went viral

ரசிகர் பட்டாளம்…

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. ரசிகர்களிடம் தொடர்ந்து இணைப்பில் இருந்துவரும் மாளவிகா அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளங்கள் மூலமாக பதிலளித்து வருகிறார்.

Karthi P Chidambaram reply to malavika mohanan tweet went viral

கார்த்தி ப சிதம்பரத்தின் பரிந்துரை…

இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் “புதிதாக வெளியான படங்கள் அல்லது சீரிஸ் பார்க்கலாம் என்று இருக்கிறேன். ஏதாவது பரிந்துரைகள்?” என்று டிவீட் செய்திருந்தார். இந்த டிவீட்டில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான கார்த்தி ப சிதம்பரம் “Inventing Anna” என்ற சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான சீரிஸை பரிந்துரைத்துள்ளார். அவரின் இந்த பரிந்துரை கமெண்ட் ஸ்க்ரீன் ஷாட்களாக டிவிட்டரில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

Karthi P Chidambaram reply to malavika mohanan tweet went viral

Karthi P Chidambaram reply to malavika mohanan tweet went viral

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Karthi P Chidambaram reply to malavika mohanan tweet went viral

People looking for online information on கார்த்தி ப சிதம்பரம், மாளவிகா மோகனன், Karthi P Chidambaram, Malavika Mohanan, Malavika mohanan tweet will find this news story useful.