RIP: தேசிய விருது வென்ற இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் மரணம்..!
முகப்பு > சினிமா செய்திகள்இந்திய சினிமாவின் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார். பாலக்காட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி தம்பதியருக்கு மகனாக 1931ஆம் ஆண்டு சேதுமாதவன் பிறந்தார். தமிழ்நாட்டின் வட ஆற்காடு மற்றும் பாலக்காட்டில் குழந்தைப் பருவத்தை தொடர்ந்து பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்றார். மனைவி: வல்சலா சேதுமாதவன். குழந்தைகள்: சந்தோஷ், உமா, சோனுகுமார். இவருக்கு வயது 90.
சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவர் படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளது. 2010 இல் இவர் ஜேடி டேனியல் விருதைப் பெற்றவர். தேசிய மற்றும் மாநில திரைப்பட விருதுகளின் ஜூரி தலைவராக பலமுறை இருந்துள்ளார். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்படப் படிப்பை படிக்காமல் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் கே.எஸ்.சேதுமாதவன். இவருடைய படங்கள் 10 முறை தேசிய விருதை வென்றவை.
சேதுமாதவன் 1951 ஆம் ஆண்டு சேலம் திரையரங்கின் மர்மயோகி திரைப்படத்தில் ராமநாதனின் உதவியாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1961 இல் வீரவிஜயம் என்ற சிங்களத் திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். அசோசியேட் பிக்சர்ஸ் மூலம், டி.இ. வாசுதேவன் இயக்கிய ஞானசுந்தரி (1961) அவரது முதல் மலையாளப் படம். மலையாளத்தில் கமல்ஹாசனை முதலில் அறிமுகப்படுத்தியவர். கமலைக் குழந்தை நடிகராக மலையாளத்துக்குக் கொண்டுவந்தது மட்டுமின்றி, கன்னியாகுமரி படத்தின் மூலம் இளைய வயது வாலிப கமலையும் மலையாளத்துக்குக் கொண்டுவந்தார் சேதுமாதவன்.
சேதுமாதவனின் பெரும்பாலான படங்கள் இலக்கியப் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை. பிரபல மலையாள எழுத்தாளர்களின் கதைகளை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் 65 படங்களை எடுத்துள்ளார்.
இவரது இறப்புக்கு கமஹாசன் டிவிட்டரில், "காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021