சாபா - Hai... பசா - Bye : பாகுபலி கிலிக்கி மொழியை கத்துக்கனுமா... இதோ அதுக்கான செம ஐடியா!
முகப்பு > சினிமா செய்திகள்பாகுபலி படத்தில் வந்த கிலிக்கி மொழியை கற்றுக்கொண்டு பேச மதன் கார்க்கி மிகப்பெரிய செயலை செய்துள்ளார்.
ராஜமௌளி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாகுபலி. பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா நடித்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று வசூல் சாதனை செய்தது. மேலும் பாகுபலி படத்தில் காலகேயர்கள் பேசும் கிலிக்கி மொழியும் மிகப் பிரபலமானது. சிறுவர்கள் தொடங்கி பலரும் இந்த மொழியை விளையாட்டாக பேசி வந்தனர். கிலிக்கி மொழிக்காக தனிப்பாடலும் வெளியானது.
இந்நிலையில் கவிஞர் மதன் கார்க்கி கிலிக்கி மொழியை கற்றுக்கொள்ள தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளார். முதலில் படத்துக்காக கற்பனையாக உருவாக்கப்பட்ட இது, இப்போது 3000 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட புதிய மொழியாக மாறியுள்ளது. இதன் மூலம் கிலிக்கி மொழியை பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ராஜமௌளி இந்த இணையதளத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
It was with great research that @madhakarky created the #KiLiKi language for @BaahubaliMovie. You all can learn the world’s youngest & easiest language now.
Here's the #KiLiKi language site on #InternationalMotherLanguageDay https://t.co/OWazqjXjth@KilikiWorld @KaReFoIndia pic.twitter.com/t4eZ7yzGFs
— rajamouli ss (@ssrajamouli) February 21, 2020