ஆடுகளம் - அயன் - மைனா - சேதுபதி - எல்லாம் அட்டக்கத்தி தினேஷின் அடுத்த படத்தில்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அட்டக்கத்தி தினேஷின் அடுத்த படம் பற்றி அசரவைக்கும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர் தினேஷ். இவர் நடித்த குக்கூ, விசாரணை, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்கள் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குண்டு படமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் தினேஷின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினேஷின் அடுத்த படத்தை மதயாணைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்குவதாக தெரியவந்துள்ளது. இப்படத்திற்கு தேரும் போரும் என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்க, சேதுபதி படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும் அயன், வேட்டையாடு உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த ராஜீவன் ஆர்ட் டைரக்டராகவும், மைனா சுகுமார் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்ரம் சுகுமாறன் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் வசனத்தில் வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கது.
Here is the Title look of #TherumPorum Shoot begins soon!
Directed by #VikramSugumaran
Starring @Dineshvcravi @NalluPictures @justin_tunes @ThaiSaravanan @mynnasukumar @Actor_ArulDass @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/pPOcCKiskL
— Nallusamy Pictures (@NalluPictures) February 21, 2020