தமிழ்நாட்டில் 'பாகுபலி' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'பிகில்'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 17, 2019 09:58 AM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியான படம் 'பிகில்'. அட்லி இயக்கியிருந்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 'பிகில்' திரைப்படம் தமிழக அளவில் 'பாகுபலி' திரைப்படத்தை விட அதிகம் வசூலித்துள்ளதாம். பாகுபலி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 76 கோடி வசூலித்திருந்தது என்றும் 'பிகில்' திரைப்படம் தமிழக அளவில் ரூ.80 கோடி வசூலித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
Tags : Begil, Baahubali 2, Vijay, Thalapathy, Atlee