www.garudabazaar.com

"மறுபடியும் யாரையாவது Dating பண்ணுங்க".. ரசிகரின் கேள்விக்கு சமந்தா அளித்த செம்ம பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌.

Samantha Ruth Prabhu reaction in Twitter for fan tweet

விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். 

நடிகை சமந்தா நடித்த யசோதா படம் தெலுங்கில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

Samantha Ruth Prabhu reaction in Twitter for fan tweet

சமீபத்தில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள “சகுந்தலம்” திரைப்படம்  வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தமது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் டவீட்டுக்கு பதில் அளித்துள்ளார். "எனக்கு தெரியும். நான் இதை சொல்லும் இடத்தில் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன் யாரையாவது டேட் செய்யுங்கள்" என ட்வீட் செய்ய, இதற்கு பதில் அளித்த சமந்தா, "நீங்கள் என்னை காதலிப்பது போல் வேறு யார் காதலிப்பார்கள்" என பதில் அளித்துள்ளார்.

Tags : Samantha

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu reaction in Twitter for fan tweet

People looking for online information on Samantha will find this news story useful.