வரலக்ஷ்மி சரத்குமார் குறித்து பிரபல நடிகர் கமெண்ட் - ''பார்ட்னர் வெட்கப்படுறீயா ? எப்படி ?''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி, சிம்புவுடன் இணைந்து 'போடா போடி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'தாரைதப்பட்டை', 'சர்கார்', 'மாரி 2' என வித்தியாசமான, அதே நேரம் போல்டான கதாப்பாத்திரங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

Mafia Fame Prasanna Comments Varalaxmi Sarathkumar Post

இந்நிலையில் நான் வெளிப்படையாக வெட்கப்படும் நாட்களில் ஒன்று என தனது நாந்தி (Naandhi) என்ற தெலுங்கு படத்துக்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு நடிகர் பிரசன்னா, ''பார்ட்னர், நீ வெட்கப்படுறீயா  ? எப்படி ? என்று கேட்க, அதற்கு வரலக்ஷ்மி, அதனால் தான் நான் எப்பொழுதாவது என்பது போல குறிப்பிட்டிருந்தேன் என்கிறார். 

வரலக்ஷ்மி சரத்குமார் தெலுங்கில் 'தெனாலி ராமகிருஷ்ணா பிஏ பிஎல்' என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை ஜி.நாகேஷ்வர ரெட்டி இயக்கியிருந்தார்.

Entertainment sub editor